144 பேர் ஆதரவு - நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

Vijay TN Assembly Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 13, 2026 06:26 AM GMT
Report

144 பேர் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் மீது பேசினர். 

144 பேர் ஆதரவு - நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி | Vijay Tvk Govt Won In Confidence Vote With 144 Mla

அதைத்தொடர்ந்து பேரவையை 6 கட்டங்களாக பிரித்து எண்ணிக்கையை எண்ணி கணக்கெடுக்கும் முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பில், 144 எம்எல்ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். 22 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் உட்பட 59 பேர் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்துள்ளனர். பாமகவை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் நடுநிலை வகித்துள்ளார்.

ஆதரித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையிலான அணி ஆதரவாக வாக்களித்துள்ளது.     

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

பின்னர், தேதி குறிப்பிடாமல் சபையை ஒத்திவைப்பதாக பேரவை தலைவர் தெரிவித்துள்ளார்.