தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு - முன்மொழிந்த விஜய்
தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை விஜய் முன்மொழிந்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்ததன் மூலம் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 107 ஆக உள்ளது.

இதனையடுத்து, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
முன்மொழிந்த விஜய்
தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

அதைத்தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் மீது பேசி வருகின்றனர். காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியயூனியன் முஸ்லீம் லீக், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அனைத்து கட்சியினரும் உரையாற்றிய பின்னர், தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

சபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% + 1 உறுப்பினர் ஆதரவு தேவை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தால் அரசு தொடர்ந்து நடைபெறும். தோல்வியடைந்தால் ஆளுநருக்கு தெரிவிக்கப்படும்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளா நிலையில், சிவி சண்முகம் தலைமையிலான அணி தவெக அரசை ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் பதவி பறிபோகும் என எடப்பாடி தரப்பு எச்சரித்த நிலையிலும் தவெகவிற்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil