கட்டாய தாலி கட்டுன ஹீரோ: ட்விட்டரில் ஆப்பு வைத்த திருவள்ளூர் போலீஸ்
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரிலான சீரியல் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. ஐ
இது தொடர்பாக ப்ரமோ வீடியோ ஒன்று விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதில் ஹீரோயினாக நடித்திருப்பவர் , அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்திருப்பது போலவும், அவர் ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அப்போது அங்கு வரும் ஹீரோ அந்த கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடியை தட்டு கேட்டு தாலியை பறிப்பதும், அதனை பார்த்து கோபமடையும் ஹீரோயின் அவரிடம் பிரச்சனை செய்கிறார்.
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) July 26, 2021
இதனால் கடுப்பான ஹீரோ அம்மன் சிலையில் உள்ள ஒரு தாலியை எடுத்து வலுக்கட்டாயமாக காட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதை கவனித்த திருவள்ளூர் மாவட்ட, போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் விஜய் டிவி பதிவில் கமெண்ட் ஒன்றை பதிவிட்டார்.
அதில் இதுபோன்ற செயல்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும், கல்வி நிலையங்கள், கோவில்கள், பஸ் நிலையம், ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பூங்கா , கடற்கரை, திருவிழா நடைபெறும் இடங்கள் உட்பட எந்த ஒரு இடத்தில் வைத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தாலும் அந்த நபருக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை இணையவாசிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.