அமீர்-பாவனி திருமண அறிவிப்பு - தாலி எடுத்து கொடுக்கப்போவதே அந்த விஜய் டிவி பிரபலம்தானாம்!
பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமீர்-பாவனி
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதில், சக போட்டியாளரான நடன இயக்குநர் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். அதன்பின் “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்று அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர்.
திருமணம்?
அதனையடுத்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. மேலும், ஒரே வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அமீர், VJ பிரியங்காவின் 15 ஆண்டுக் கால கலை வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அமீரிடம் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போறீங்க? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் பிரியங்கா. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் திருமணத்திற்குப் பிரியங்கா தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil