விருப்பமனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல்

Vijay Election Thamizhaga Vetri Kazhagam
By Yashini Mar 10, 2026 05:21 AM GMT
Report

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது.

இந்நிலையில், தவெக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கடந்த பிப் 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை தவெக பெற்றது.

விருப்பமனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல் | Vijay Tv Interview Tvk Candidate Today

மொத்தம் 4,200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார்.

அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்க உள்ளது.

மேலும், நேர்காணலுக்கான விரிவான ஏற்பாடுகள் கட்சி அலுவலகத்தில் செய்யப்பட்டு உள்ளது.