முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல் - சோகத்தில் ரசிகர்கள்
விஜய் டிவியில் பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல் ஒன்று முடியவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
ரசிகர்கள் விரும்பும் வகையில் பல ஹிட் சீரியல்களை களமிறக்குவதில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் ஒருபக்கம் காமெடி கலக்கல் ரியாலிட்டி ஷோக்கள், பிரமாண்ட பிக்பாஸ் ஷோ என்று இருந்தாலும், சீரியல்கள் தான் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் ராஜபார்வை, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, நாம் இருவர் நமக்கு இருவர், காற்றுக்கென்ன வேலி, மெளனராகம், தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, வேலைக்காரன் உள்ளிட்ட பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கிலும் அசத்தி வருகிறது.
இந்நிலையில் மதியம் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலான வேலைக்காரன் கடந்த 2020 டிசம்பர் 7 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாக தொடங்கியது. தற்போது இது முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தை அப்படியே காப்பி அடித்து இயக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனாலும் விமர்சனங்களை தாண்டி இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் முடிவடைய உளளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சீரியல் முடிவடைய உள்ளதாக எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது