குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

Cooku with Comali when starts Star Vijay
By Anupriyamkumaresan Sep 21, 2021 02:00 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

விஜய் டிவியில் பிரபலமான நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு பிரபலமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதில் மக்கள் மனம் கவர்ந்த ஒரு ரியாலிட்டி நிகச்சியாக குக் வித் கோமாளி இடம் பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் | Vijay Tv Cooku With Comali Show 3 November Starts

இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நல்ல நகைச்சுவை கலப்புடன் இருப்பதால் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது சீசன் தொடங்கினாலும் அது வெற்றி பெறுவது கட்டாயம் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் சினிமா பட வாய்ப்புகளில் பிஸியாக இருப்பதால் மூன்றாவது சீசன் தொடங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகின.

ஆனால் மக்களுக்கு கொரோனா காலத்தில் நல்ல சின்ன ஆறுதல் தரும் நிகழ்ச்சியாக இது இருந்ததால் மீண்டும் மூன்றாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் குக் வித் கோமாளி சீசன் 3 இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் | Vijay Tv Cooku With Comali Show 3 November Starts

இதை கேட்ட ரசிகர்கள் ஆனந்தத்தில் இருக்கின்றனர். ஆனால் இந்த சீசனில் அதே கோமாளிகள் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக் குறியாக தான் இருக்கிறது.

இது தவிர இந்த நிகழ்ச்சி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் விஜய் டிவி சார்பில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.