Friday, Apr 4, 2025

இமான் அண்ணாச்சியை முதுகில் குத்திய இசைவாணி - வெளியான ப்ரோமாவால் ரசிகர்கள் ஆவேசம்

Bigg Boss promo season 5
By Anupriyamkumaresan 3 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஆறாவது வாரம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரங்களில் போட்டியாளர்களின் உண்மையான முகம் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரத்தின் தலைவராக இசைவாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சர்வாதிகாரியாக பாவ்னி இருக்கிறார். மேலும் 7 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். தற்போது கொடுக்கப்பட்டுள்ள லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் நாமினேட் ஆன போட்டியாளர்களை காப்பாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இமான் அண்ணாச்சியை முதுகில் குத்திய இசைவாணி - வெளியான ப்ரோமாவால் ரசிகர்கள் ஆவேசம் | Vijay Tv Biggboss Promo Released Fans Angry

இந்நிலையில் கொடுக்கப்பட்டுள்ள பொம்மை டாஸ்கில் போட்டியாளர்கள் அடிதடி சண்டையுடன் வாக்குவாதம் செய்து போட்டி போடுகின்றனர். அதனால் தற்போது விறுவிறுப்பு கூடி உள்ளது.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இமான் அண்ணாச்சி பொம்மையை தூக்கிக் கொண்டு சென்ற இசை கடைசியாக போனதால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் இசைவாணி தான் தன்னை விளையாட விடாமல் தடுத்ததாகவும் முதுகில் குத்தியதாக சொல்ல இசைவாணி நான் குத்த வேண்டும் என நினைத்தால் நேரடியாக குத்துவேன் இப்படி இல்லை என சொல்கிறார்.

இமானிற்கு ராஜு ஆதரவாக பேச அதற்கும் இசைவாணி சண்டை போடுகிறார். இப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.