பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து - குழந்தைகளை விட்டு இருக்க முடியாது: ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக அவரே சொன்ன விளக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் பட்டியலில், டிக்டாக் மூலமாக பிரபலமடைந்த ஜிபி முத்து பெயர் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு தனது யூடுப் சேனலில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். விஜய் டிவியில் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற பல ரியலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் மக்களிடம் அதிகம் பேசப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஏற்கனவே 4 ஆண்டுகளில் 4 சீசன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு 5வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதை பார்த்த ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த ஆண்டும் நடிகர் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில உறுதியான பிரபலங்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதில் டிக்டாக் மூலமாக பிரபலமான ஜிபி முத்து பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர் பிக்பாஸ் வீட்டின் முன்னாள் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இந்நிலையில் நேற்று அவருடைய யூடியூப் சேனலில் நேரலையில் தனது ரசிகர்களிடம் அவர் பேசினார்.
அப்போது பல பிக்பாஸ் வீட்டிற்கு போறீங்களா என கேள்வி எழுப்பினார்கள். அப்போது பிக்பாஸ் 5- வில் கலந்து கொள்வதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். என்னால் போன் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு, என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் முக்கியம்” என கூறியுள்ளார்.