பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரும் புது ட்விஸ்ட் - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த சீரியல் குறித்து சில விஷயங்கள் பேசப்பட்டது.
இதில் வெண்பாவாக நடித்த பரீனாவிற்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. அடுத்ததாக கண்ணம்மா வேடத்தில் நடித்துவந்த ரோஷினி தொடரில் இருந்து விலக வினுஷா என்பவர் அவரது வேடத்தில் புதிதாக நடித்துவருகிறார்.
அவரை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீரியலில் ஒரு ட்விஸ்டாக கர்ப்பமாக இருந்த அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்றைய நிகழ்ச்சியில் காண்பிக்கவுள்ளதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
You May Like This