வீடியோவால் சிக்கிய விஜய் டிவி பிரபலங்கள் - பரவும் காதல் கிசு கிசு
அருண் பிரசாத், விஜே அர்ச்சனா பகிர்ந்துள்ள வீடியோவால் இருவரும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
அருண்- அர்ச்சனா
பாரதி கண்ணம்மா சீசன் 1 நிகழ்ச்சியில் டாக்டர் பாரதியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் அருண் பிரசாத். அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் சீசன் முடிக்கப்பட்டு தற்போது இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
அருண் பிரசாத்தும், விஜய் டிவியை சேர்ந்த மற்றொரு பிரபலமும் காதலித்து வருவதாக சமீப நாட்களாக செய்திகள் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'ராஜா ராணி 2' சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் விஜே அர்ச்சனா.
கிசு கிசு
சில மாதங்களுக்கு முன்பாக சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில், அருண்பிரசாத் சமீபத்தில் சுற்றுலா சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதே போல் விஜே அர்ச்சனாவும் தான் சுற்றுலா சென்ற புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இரண்டும் ஒரே இடம்தான் என்பதால் இருவரும் சேர்ந்து தான் சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. மேலும் காதலிப்பதும் உறுது ஆவதாக செய்திகள் பரவி வருகிறது.