வெடிக்கும் விவகாரம் - பிரியங்கா, மாகாபா, கோபிநாத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Priyanka Deshpande Star Vijay Gopinath Chandran
By Sumathi Sep 21, 2024 06:00 PM GMT
Report

விஜய் டிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாப் தொகுப்பாளர்கள்

சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

makapa - priyanka

தொடர்ந்து பல பிரபலங்களும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதே சமயம் குரேஷி, அமீர், பாவனி உள்ளிட்ட பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்கள்.

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்; விதி மீறல் - வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

மணிமேகலை - பிரியங்கா விவகாரம்; விதி மீறல் - வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சம்பள விவரம்

இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக நீயா நானா ஷோ மூலம் முத்திரை பதித்த கோபிநாத்திற்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

vijay tv anchors

மாகாபா ஆனந்திற்கு ஒரு எபிசோடுக்கு இரண்டரை லட்சம் சம்பளம், ரக்ஷனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 1 லட்சமும், மணிமேகலைக்கு ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகளாக அங்கு பெண் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவிற்கு ஒரு எபிசோடிற்கு இரண்டரை லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுவதான செய்திகள் இணையத்தில் வலம் வருகிறது.