ப்ரியங்கா ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா…? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

By Nandhini Apr 27, 2022 07:34 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்தவர் தான் ப்ரியங்கா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனையடுத்து, ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட ப்ரியங்காவிற்கு இந்நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். 

தனது நண்பர்களுடன் வெளியூர் சுற்றுப்பயணம் சென்றால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்ததாக தகவல் வெளியானது. இதனால் கடுப்பான விஜய் டிவி நிர்வாகம், பிரியங்காவை நிகழ்ச்சியிலிருந்து நீக்கியதாக தகவல் பரவியது. 

இத்தகவல் பொய்யென்று நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி விருது நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினி விருது ப்ரியங்காவிற்கு கொடுத்து கவுரவப்படுத்தியது விஜய் டிவி. 

இந்நிலையில், பிரியங்கா விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்டிவி தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்குவதற்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து, ஆத்தாடி இந்த வேலைக்கு இவ்வளவு சம்பளமா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால், இது உண்மையா? பொய்யான்னு? ப்ரியங்காவே சொன்னாத்தான் தெரியும்...  

ப்ரியங்கா ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா…? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள் | Vijay Tv Anchor Priyanka