அத்துமீறுவார்கள்; அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - முகத்திரையை கிழித்த ஜாக்லின்

Tamil Cinema Star Vijay Serials
By Sumathi Feb 21, 2023 03:30 PM GMT
Report

ஆங்கர் செய்த போது ஏற்பட்ட தர்ம சங்கடங்கள் குறித்து ஜாக்லின் மனம் திறந்துள்ளார்.

ஜாக்லின்

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். கானா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.

அத்துமீறுவார்கள்; அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - முகத்திரையை கிழித்த ஜாக்லின் | Vijay Tv Anchor Jacqueline About Her Troubles

இவர் விஜய் டிவியில் நடித்து வந்த தேன்மொழி சீரியல் கூட சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “உங்களுக்கு எப்போதாவது அதிக கோபம் வந்து கொச்சை வார்த்தையால் திட்டியிருக்கிறீர்களா என கேட்கப்பட்டது” அதற்கு “எனக்கு அப்படி கோபம் வந்தால் கத்திவிடுவேன், ஆனால் அப்படி நான் மேடையில் எரிய பிறகு கோபம் என்பது வராது.

அனுபவம்

ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கோபம் வந்திருக்கிறது. படங்களில் நடிக்கும் பிரபலங்கள் என்று நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஒரு சிலர் தொகுப்பாளினி என்றால் எப்படி வேண்டுமானாலும் நாம் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவர்களிடம் நடந்து கொள்ளலாம் தொகுப்பாளினி என்று கிடையாது நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் கூட தோளின் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற விஷியங்களை அவர்கள் செய்யும் போது அவை எனக்கு அசௌகரியமாக இருக்கும்.

அத்துமீறுவார்கள்; அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - முகத்திரையை கிழித்த ஜாக்லின் | Vijay Tv Anchor Jacqueline About Her Troubles

அந்த நேரம் எனக்கு அவர்கள் மீது கடுமையான கோபம் வந்திருக்கிறது. பொதுவாக பெரிய நடிகர்களிடம் நாம் புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம் என்று கேட்டால் புகைப்படம் எடுக்கும் போது கூட கொஞ்சம் தள்ளி நமக்கு மரியாதை கொடுத்து நிற்பார்கள். அப்படி நமக்கு நடிகர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் போது இவர்கள் “நான் தான் இங்கு பிரபலமானவர் என்று “என் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற அநாகரிகமான விஷியங்களை செய்யும் போது எனக்கு அப்படி எரிச்சலாக இருக்கும்.

இது பலருக்கும் நடக்கிறது உதாரணமாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே தூக்கி சுற்றுவது போன்ற செயல்கள் செய்வதற்கு முன்னர் ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கலாம். உங்களுக்கு ஒரு இருக்கிறதா? என்று. அதை விட்டுவிட்டு இப்படி அநாகரிகமாக என்னிடம் நடந்து கொண்டால் “தள்ளி போய்ட்டு அடிச்சுருவா” என்று கூறிவிடுவேன். அதனை ஒரு முறை நிகழ்ச்சியின் போது கூறியும் இருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.