விஜய்யும் த்ரிஷாவும் ரியல் ஜோடிகள் ஆகப்போகிறார்களா? பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!
விஜய் த்ரிஷா
விஜய் - த்ரிஷா இருவரும் இதுவரை 4 படங்களில் ஜோடிகளாக இனைந்து நடித்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாகவே இருக்கும். இவர்களின் நடிப்பில் வெளிவந்த முதல் படம் கில்லி. இந்த படம் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இறுதியாக குருவி என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் இவர்கள் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் முடிந்த நிலையில் நார்வேயில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக வளம் வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்தது. தற்போது இது சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களிடையேயும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்தணன் பேட்டி
இந்நிலையில் சினிமா மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் 'விஜய்யும் த்ரிஷாவும் ஆன்ஸ் கிரீனில் சூப்பர் ஜோடிகள், அவர்கள் ரீல் ஜோடிகளா அல்லது ரியல் ஜோடிகளை என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்க்கு பதிலளித்த அந்தணன் 'ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆவதற்கான ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒரு பக்கம் இது உண்மை என்பது போல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். இது நிரந்தரம் என்று நம்மால் சொல்ல முடியாது. அதனால் இதை போகப் போக பார்க்கலாம் என்று அவர் பேசியுள்ளார்.
Nice role model pic.twitter.com/WNArRNgdLD
— Matthew (@Leennister) August 12, 2023