'LEO' படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் விஜய்.. - வைரலாகும் புகைப்படம்...!

Vijay Viral Photos Leo
By Nandhini Feb 10, 2023 02:04 PM GMT
Report

'LEO' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் ‘தளபதி - 67’

‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

vijay-trisha-leo-movie-viral-photo

‘LEO' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

 'LEO' படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் நடிகர் விஜய் கூலாக போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர். 

இதோ அந்த புகைப்படம் -