முதலமைச்சர் விஜய்- த்ரிஷா! கங்கனா ரணாவத் சொன்னது என்ன?

Trisha Kangana Ranaut
By Fathima Sep 09, 2026 04:54 AM GMT
Report

முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையேயான உறவு குறித்து விமர்சனங்கள் உள்ள நிலையில் பாஜக எம்.பி-யான கங்கனா ரணாவத் பேசியுள்ளார்.

நேற்று ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள், மதிப்புமிக்க நடிகருக்கும், நடிகைக்கும் இடையேயான உறவு குறித்து எழுந்த பிரச்சனைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

அதில் எப்போதும் பெண்ணை மட்டுமே குறிவைக்கிறார்கள், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இதுதான் நடக்கிறது.

ஒரு பெண் வேலைக்கு சென்றாலோ, அதிகாரத்தில் இருந்தாலோ எப்போதும் அவளை வீழ்த்த கண்ணியத்தின் மீது குறிவைக்கிறார்கள்.

இதை எப்போது தான் நிறுத்த போகிறோம்? சமூகத்தில் பெண்களை பார்க்கும் பார்வை மாற வேண்டும் என தெரிவித்தார்.  

முதலமைச்சர் விஜய்- த்ரிஷா! கங்கனா ரணாவத் சொன்னது என்ன? | Vijay Trisha Kangana Ranaut Speaks

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24