சைக்கிள் எடுத்த விஜய் .. மிரட்டிய அஜித்: நடந்தது என்ன?

ajith vijay valimai vote thalpathi65
By Jon Apr 06, 2021 11:40 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது அதனை பின்பர்றி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இதில் திரைப்பிரபலங்கள் வாக்களிக்க வரும் போது பரபரபாவது இயல்பான ஒன்றுதான் அதிலும் விஜய் அஜித் வாக்களிக்கும் போது அங்கு நடக்கும் சம்பவம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார்.

தனது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. அதே சமயம் பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக பேசப்படுகிறது. அவர் சைக்கிளில் வந்த போது போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தாலும் இருபுறமும் தலைவா என்ற கோஷத்தோடு இரு சக்கர வாகனங்களில் அவரது ரசிகர்கள் பேரணியாக வந்தனர்.

 

வாக்களித்து முடித்த பின் மீண்டும் தனது சைக்கிளில் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்த விஜய் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்கூட்டரில் அங்கிருந்து திரும்பினார்.

 

திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான விஜய் சைக்கிளில் வந்து வாக்குச் செலுத்தியிருப்பது அனைவரிடமும் கவனம் பெற்று வருகிறது. அதே போல நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள்.

அஜித் வாக்களிக்க வந்தபோது, அவருக்கு அருகில் காவல்துறையினர் வர சற்று தாமதமானது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முன்வந்தார். அஜித் அவர்களைக் கோபமாக முறைக்கவே ரசிகர்கள் சிலர் திரும்பிச் சென்றார்கள். அப்போது இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த போது நடிகர் அஜித் அவருடைய போனை பறித்துவிட்டார்.

கொரோனா காலத்தில் கூட்டத்தை தவிர்க்கவும், வாக்கு சாவடியில் செல்போனுக்கு அனுமதி இல்லை எனவே அஜித் தனது ரசிகரிடம் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது. தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு அஜித் காருக்கு ஏற நடந்து செல்லும் போது நின்று கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள், ரசிகர்கள் அனைவரிடமும் 'ஸாரி... ஸாரி... நன்றி' என கூறினாராம்.