நாளை காலை 10 மணிக்கு விஜய் பதவி ஏற்பு! ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக வெற்றி கழகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களின் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த மே 4 ஆம் திகதி தமிழக தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியிருந்தது. தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரமே பரபரப்பாக இருந்தது.

தற்போது ஒருவழியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
தற்போது 120 எம்எல்ஏ-கள் ஆதரவு கடிதத்துடன் சற்றுமுன் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் பிரகாரம் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்க இருக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூரியன் புதன் இணைவால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்... டபுள் ஜாக்பாட் பெறும் டாப் 3 ராசிகள்! Manithan