தவெக வேட்பாளர் பட்டியல் - நாளை அறிவிக்கும் விஜய்

Vijay Puducherry Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Mar 21, 2026 02:54 PM GMT
Report

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை நாளை விஜய் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

தவெக வேட்பாளர் பட்டியல் - நாளை அறிவிக்கும் விஜய் | Vijay To Release Puducherry Tvk Candidate List

புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும், விஜய்யின் தவெக விசில் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

கடந்த 16 ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் நேர்காணல் நடத்தினார்.

தற்போது வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 23 ஆம் தேதி தவெக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் உடன் பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லஜக 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. 

தவெக வேட்பாளர் பட்டியல் - நாளை அறிவிக்கும் விஜய் | Vijay To Release Puducherry Tvk Candidate List

திமுக - காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. இரு கட்சிகளும் 14 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், ஒரே தொகுதியை இரு கட்சிகளும் குறிவைப்பதால் இழுபறி நீடிக்கிறது. 

தவெக வேட்பாளர் பட்டியல் - நாளை அறிவிக்கும் விஜய் | Vijay To Release Puducherry Tvk Candidate List

இருப்பினும், 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இரு கட்சிகளிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 

தவெக வேட்பாளர் பட்டியல் - நாளை அறிவிக்கும் விஜய் | Vijay To Release Puducherry Tvk Candidate List

தவெக பொதுச்செயலளராக உள்ள ஆனந்த், 2006 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியின் சார்பில் புஸ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.