தாராபுரத்தில் இன்று 30 இடங்களில் முதல்வர் விஜய் பிரசாரம்

Vijay TVK
By Yashini Oct 04, 2026 05:03 AM GMT
Report

தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று 30 இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

மக்களை சந்திக்கும் முதல்வர்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தாராபுரத்தில் இன்று 30 இடங்களில் முதல்வர் விஜய் பிரசாரம் | Vijay To Meet The Public At 30 Place In Dharapuram

தாராபுரத்தில் மேட்டுக்கடை பகுதியில் இருந்து தாசர்புரம் வரை சுமார் 114 கி.மீ. தொலைவுக்கு விஜய் சாலை வழியாக சென்று மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் சுமார் 30 இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தவெக எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளியிட்ட அறிக்கை     

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 1.00 மணி அளவில் மாருதி நகரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.

அவரது வாகனப் பிரசாரம் பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

1.மாருதி நகர்

2.உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு

3.காவல்நிலையம் சந்திப்பு

4.ஐந்து சாலை சந்திப்பு

5.மீனாட்சிபுரம்

6.குளத்துப்பாளையம்

7.கரையூர்

8.மூலனூர்

9.வஞ்சியம்மன் கோயில்,

காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் தாராபுரம் தொகுதி வாகனப் பிரசாரத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

இந்தப் பிரசாரத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாகனப் பிரசாரத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, பிரசாரம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு என்.ஆனந்த்,

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பொதுச் செயலாளர்,

தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat),

தமிழக வெற்றிக் கழகம்