ஓட்டு கேக்க எங்க வருவீங்க? 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் தனித்தனியாக சந்திக்கும் விஜய்!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Oct 25, 2025 03:21 PM GMT
Report

41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் தனித்தனியாக விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் விவகாரம்

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

vijay

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். ஆனால், விஜய் மட்டும் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் வருமானத்தை விட்டு வந்தார்? டிடிவி தினகரன்

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் வருமானத்தை விட்டு வந்தார்? டிடிவி தினகரன்

விஜய் திட்டம்

தொடர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தவெக சார்பில் வழங்கப்பட்டது. இதற்கிடையில், விஜய் விரைவில் கரூர் செல்ல உள்ளதாகவும், கரூரில் திருமண மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஓட்டு கேக்க எங்க வருவீங்க? 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் தனித்தனியாக சந்திக்கும் விஜய்! | Vijay To Meet Karur Victims In Mamallapuram

இந்நிலையில், மண்டப உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இடம் வழங்க முன்வராததால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மாமல்லபுரம் அழைத்து வரும் தவெக நிர்வாகிகள்

அவர்களை தனியார் விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.