ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய்

Vijay Tamil nadu Asian Games
By Karthikraja Oct 05, 2026 05:17 AM GMT
Report

cm vijay to host dinner for asian games metal winning athletes: ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் விருந்தளிக்க உள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி

20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 4 ஆம்தேதி வரை நடைபெற்றது.

16 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில், 46 நாடுகளை சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய் | Vijay To Host Dinner For Asian Games Metal Winners

43 விளையாட்டுகளில், 469 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தமாக 85 பதக்கங்களுடன் 4வது இடம்பிடித்துள்ளது.

இதில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

விருந்தளிக்கும் முதல்வர் விஜய்

பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் நாடு திரும்பிய போது அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் விருந்தளிக்க உள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் விஜய்.