நாளை காலை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 08, 2026 02:23 PM GMT
Report

நாளை காலை 11;30 மணிக்கு தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்

 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

நாளை காலை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் | Vijay To Be Take Oath As Cm In May 9

5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது.

நேற்று காலை 11;30 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டு, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரா உரிமை கோரினார்.

ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் மறுத்து விட்டார்.

இதனையடுத்து, தலா எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. 

நாளை காலை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் | Vijay To Be Take Oath As Cm In May 9

இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன. மேலும், விசிகவும் தங்களது ஆதரவை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் விஜய் இன்று 3வது முறையாக ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 11;30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதை தொடர்ந்து, ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.