கேரளா செல்லும் முதல்வர் விஜய் - என்ன காரணம்?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா செல்லும் முதல்வர் விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், முதல் கட்சியாக 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
மேலும், தவெக அமைச்சரவையில் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

வரும் 18 ஆம் திகதி கேரளா முதலமைச்சராக விடி சதீசன் பதவியேற்கும் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி போன்ற காங்கிரஸ் முதலமைச்சர்களும் விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.