விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே? வெளியாக உள்ள கட்சி சின்னம்
விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே நடைபெற உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாக உள்ளது.
விஜய்
தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அடுத்தது மக்கள் சந்திப்பை மேற்கொண்டு, பாஜக மற்றும் திமுகவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.

கடைசியாக கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி, ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு அவரது தொகுதியில் நடந்த நிகழ்வு என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாக உள்ளதால், அதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது ஜனநாயகனுக்கு தணிக்கை சாண்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் ஆஜராக நாளை டெல்லி செல்கிறார்.
அடுத்த மக்கள் சந்திப்பு
இதனையடுத்து, சேலம் அல்லது தர்மபுரியில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பை நிகழ்த்த விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனேவே அமமுக, தேமுதிக, காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் கூட்டனிதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் சில கட்சிகள் க்ரீன் சிக்னல் காட்டி வருவதால், இந்த மக்கள் சந்திப்பில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றவும் திட்டமிட்டு வருகிறார் விஜய்.
இதே போல், தேர்தல் ஆணையத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதமே தவெகவிற்கு சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்த சின்னம் குறித்த அறிவிப்பை இந்த சந்திப்பில் வெளியிட உள்ளதால், பிரமாண்டமாக இந்த மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.