விஜய்யின் ‘தளபதி - 67’ - Title Reveal Promo வெளியீடு... - தெறிக்க விடும் ரசிகர்கள்...!

Vijay Viral Video
By Nandhini 1 மாதம் முன்
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

விஜய்யின் ‘தளபதி - 67’

‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு  இசையமைக்கிறார்.

Title Reveal Promo வீடியோ

இந்நிலையில், தளபதி 67 படத்தின் Title Reveal Promo வீடியோ படக்குழுவினர் சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படம் வரும் அக்டோம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் துள்ளி குதித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். 



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.