விஜய்யின் ‘தளபதி – 67’ சாட்டிலைட் உரிமத்தை பல கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்...! - வாயடைத்த ரசிகர்கள்...!

Vijay Sun TV
By Nandhini 1 வாரம் முன்

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

vijay-thalapathy-67-sun-tv-ott

சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

விஜய்யின் ‘வாரிசு’ படம் பல கோடிகளை வசூல் செய்து கொடுத்துள்ளது.

இதனையடுத்து, தற்போது தளபதி – 67 படத்தின் வியாபாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ‘வாரிசு’ படம் வெளியாகி முதல் 5 நாட்களிலேயே ரூ.150 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளது. அடுத்த 7 நாள்களில் ரூ.210 கோடி வசூலும், 11 நாட்களில் 250 கோடி வசூலை பெற்றுள்ளது.

இதற்கிடையில், ‘வாரிசு’ படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், அடுத்ததாக நடிகர் விஜய் லோகேஷுடன் கூட்டணியில் ‘தளபதி – 67’ படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், ‘தளபதி – 67’ படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விஜயின் கெரியரிலேயே இந்த அளவு தொகைக்கு வியாபாரம் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.