தவெக விஜய் வழங்கிய வாக்குறுதிகள்
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது பேசுகையில்,
* பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பில் நமது ஆட்சி நம்பர் 1 ஆக இருக்கும்.
* அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதல் தரத்தில் இருக்கும். போட்டித் தேர்வுகளை சந்திக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
* உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களில் அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும்.
* மாநில, மத்திய அரசு அலுவலகங்களை அணுகும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படும்.

* நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்லூரி சேர்க்கை குறித்து மாணவர்களுக்கு புரிதல் உண்டாக்கப்படும்.
* அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான கதவு பொருத்தப்பட்ட கழிப்பறைகள் உறுதி செய்யப்படும்.
* போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
* மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களில் சரிபாதி பெண்கள் இருக்கும் வகையில் மாற்றப்படும்.

* மலை கிராமங்களில் பிரசவம் பார்க்கும் வகையில் அரசு சுகாதார மையங்கள் கொண்டுவரப்படும்.
* பேருந்து போக்குவரத்து இல்லாத மலை கிராமங்கள் என்ற நிலை உருவாக்கப்படும்.
* ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள் அவர்களின் குடும்பங்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும்.
* தென் தமிழகம் உள்பட தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க கவனம் செலுத்தப்படும்.
* விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டம் காலத்திற்கேற்ப உருவாக்கப்படும்.