தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு, குஷியில் ரசிகர்கள்

Vijay Vamshi Paidipally
By Irumporai Jun 19, 2022 01:47 PM GMT
Report

விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் டைட்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.

தளபதி 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தளபதி 66 படத்தின் ஷூட்டிங் 2 மாதத்திற்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.