எழுத்து, இயக்கம் - விஜய்; இயக்குநராக களமிறங்க போகும் தளபதி விஜய்? அவரே சொன்ன பதில்!
நடிகர் விஜய் தனது திரைப்பட இயக்குநராகும் ஆசை குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா,மன்சூர் அலி கான், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்திலிருந்து 'நா ரெடி தான்' என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இறுதி கட்ட பட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு விஜய் ஜாலியாக பேட்டியளித்திருந்தார். அப்போது விஜய்யின் ரசிகை ஒருவர் 'உங்கள் அப்பா ஒரு இயக்குநர், அவர் வழியை பின்பற்றி அவரைப்போல நீங்களும் இயக்குநர் ஆக விரும்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்டார்.
பேட்டி
அதற்கு பதிலளித்த விஜய் ' நானும் நிறைய பேட்டியில் சொல்லியிருக்கிறேன் 'பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருக்கிறேன்' இயக்குநர் ஆகப் போகிறேன் என்று. இப்பவும் அதைத்தான் சொல்கிறேன்.

என்னைக்காவது ஒரு நாள் செய்தி வரும் பாருங்கள் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய் என்று. அப்படி ஒரு ஆசை இருக்கிறது பார்க்கலாம் கண்டிப்பா பண்ணுவேன்' என்று விஜய் பேசியுள்ளார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan