பெண்களை கிண்டல்; ரியல் லைஃபில் 40 பேரிடம் தர்ம அடி வாங்கிய விஜய் - வெளியான தகவல்!
நடிகர் விஜய் தனது கல்லூரி நாட்களில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா,மன்சூர் அலி கான், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்திலிருந்து 'நா ரெடி தான்' என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இறுதி கட்ட பட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு விஜய் ஜாலியாக பேட்டியளித்திருந்தார். அப்போது விஜய்யின் ரசிகை ஒருவர் 'நீங்கள் செய்த குறும்புத்தனமான விஷயம்' ஒன்றை பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டார்.
பேட்டி
அதற்கு பதிலளித்த விஜய் 'அப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது, அதில் ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கிறது. அது என்னவென்றால் 'நான் மற்றும் எனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கல்லூரி படிக்கும்போது டூர் போனோம்.

அப்போது நாங்கள் ஆண்களும்,பெண்களும் கொண்ட நண்பர்கள் ரயிலில் சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டு ஆண்கள் வந்து தேவையில்லாமல் எனது கிளாஸ் பெண்களை கிண்டல் செய்தனர். அப்போது நாங்கள் 10 பேர் இருந்தோம் அவர்கள் இரண்டு பேர்தான் இருந்தனர். அவர்கள் இருவரையும் நாங்கள் சரமாரியாக அடித்தோம். அதற்கு பின்னர் அவர்களும் போய் விட்டனர். ஆனால் எப்படி என்று தெரியவில்லை,

அடுத்த ஸ்டேஷனில் ரயில் நிற்பதற்குள் அவர்கள் ஒரு 40 பேர் வந்து எங்கள் கம்பாட்மெண்டுக்குள் நுழைந்து எங்களை சரமாரியாக தாக்கினார்கள். அப்போது தான் யோசித்தேன் ஏண்டா இப்படி பண்ணோம் என்று.
பின்னர் என்னுடைய நண்பர்கள் சிலபேர் கை,கால்களில் கட்டு போட்டுக் கொண்டு மெட்ராஸ் வந்து இறங்கினார்கள். இதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று விஜய் பேசியுள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil