1990 களில் எனக்கு போட்டியாளர் இவர்தான் : வாரிசு டியோலான்ச் விழாவில் உண்மை உடைத்த விஜய்

Vijay Varisu
By Irumporai Dec 24, 2022 05:39 PM GMT
Report

 வாரிசு பட ஆடியோலான்ச் விழாவில் பேசிய விஜய் தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும் என கூறியுள்ளார்.

வாரிசு ஆடியோ லான்ச்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

விழாவில் விஜய்

இந்த விழாவில் பேசிய விஜய் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடுக்கிற ரத்த தானத்தை பத்தி சொல்லியே ஆகணும்... ரத்தத்துக்கு ஜாதி, மதம், இனமெல்லாம் தெரியாது.

இதுதான் ரத்தத்துகிட்டயிருந்து நம்ம கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். தேவையான விமர்சனமும்... தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும். 1990 களில் ஒரு போட்டியாளர் எனக்கு எதிராக நின்றார்.

போட்டியாளர் தேவை

நான் எங்கு சென்றாலும் அவர் வந்தார், நான் அவரைப் பார்த்தேன், அவரை அடிக்க ஆரம்பித்தேன். உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. போட்டியாளர் 1992 இல் தொடங்கினார், அவர் பெயர் ஜோசப் விஜய். பிரச்னைகள் வருது.

1990 களில் எனக்கு போட்டியாளர் இவர்தான் : வாரிசு டியோலான்ச் விழாவில் உண்மை உடைத்த விஜய் | Vijay Speech In Varisu Audio Launch

நம்மல எதிர்க்கிறாங்கன்னா நாம கரெக்ட்டா போய்க்கிட்டு இருக்கோம்னுதான் அர்த்தம். தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும்.

ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். Compete with Yourself ; Be your own competition! இவ்வாறு கூறிய விஜய் ரசிகளுக்கு முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் கிடைத்துவிட்டது. இனி ரஞ்சிதம் ஸ்டைலில்தான் முத்தம் கொடுக்கப்போகிறேன்” எனக் கூறினார்.