என் வீடு எது தெரியுமா? சேலத்தில் விஜய் அனல் பறக்கும் பேச்சு
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார்.
அங்கிருந்து காரில் கூட்டம் நடக்கும் தாளமுத்து நடராஜன் திடலுக்கு வருகை தந்தார்.
வழிநெடுகிலும் விஜய்க்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விஜய் பேசுகையில், விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா? என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.
தைரியம் தான் அனைத்திற்கும் அடிப்படை, அது ஒரு சக்தியை கொடுக்கும், நம்மை ஏளமானமாக பார்க்கும் போது ஒரு உத்வேகம் வரும், கிண்டல் கேளி செய்யும் போது உத்வேகம் பிறக்கும். அதை வெற்றியாக மாற்றிக்காட்ட வேணடும்,
அங்கிருந்துதான் அந்த சக்தி உருவாகிறது என்று பேசினார்.