பதவியேற்ற பின் முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?

Vijay TVK
By Fathima May 10, 2026 06:34 AM GMT
Report

பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் விஜய் தன்னுடைய முதல் உரையில், பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளீர்கள், எனக்கு அவகாசம் கொடுங்கள்.

நான் சொன்னதை படிப்படியாக நிறைவேற்ற முயற்சிப்பேன், நிறைவேற்றுவேன், அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும்.

எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி நான் செய்வேன், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்ய விடவும் மாட்டான்.

ஜெயித்துவிட்டோம் என ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே அழித்துவிடுங்கள்.

தமிழக அரசின் தற்போதைய நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது தான் முதல் வேலை என தெரிவித்துள்ளார்.


முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள முதலமைச்சர் விஜய் | TVK