பொய் வாக்குறுதிகள்: திமுக-வை கடுமையாக விமர்சித்த விஜய்

Thamizhaga Vetri Kazhagam
By Fathima Apr 02, 2026 08:14 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார் தவெக தலைவர் விஜய்.

பெரம்பூர் தொகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார், இந்நிலையில் இன்று காலை திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் பேசுகையில், கியாஸ் பிரச்சனைக்கு திமுக, பாஜக இரண்டு அரசுகளும் தான் காரணம்.

பொய் வாக்குறுதிகள்: திமுக-வை கடுமையாக விமர்சித்த விஜய் | Vijay Speaks About Stalin In Trichy

இதுபற்றி கேட்டால் தங்களுக்கும், அதற்கும் சம்மந்தம் இல்லை என ஸ்டாலின் சார் கூறுவார். தன்னுடைய சொந்த பிரச்சனைக்கு டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின், கியாஸ் பிரச்சனைக்கு போய்ட்டு வரலாமே என தெரிவித்தார்.

2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், கியாஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் தருவதாக சொன்னீர்களே, என்னாச்சு?

கரும்புக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் தருவேன் என்றீர்களே, என்னாச்சு?

ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ அதிகமாக தருவேன் என்றீர்களே, என்னாச்சு?

ரேஷனில் உளுத்தம்பருப்பு தருவேன் என்றீர்களே, என்னாச்சு? பொய் வாக்குறுதிகள் என கடுமையாக விமர்சித்தார்.

பொய் வாக்குறுதிகள்: திமுக-வை கடுமையாக விமர்சித்த விஜய் | Vijay Speaks About Stalin In Trichy