நடிகர் விஜய்யை இயக்கப் போகும் மகன்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தை இயக்க பல இயக்குனர்கள் கதை சொல்லிஇருக்கிறார்களாம், அவர்களில் ஒருவர் அவரது மகன் சஞ்சய்யும் ஒருவராம். கனடாவில் இயக்குனருக்கான படிப்பை படித்து வரும் சஞ்சய், குறும்படங்களையும் இயக்கியுள்ளார், இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது தந்தையை இயக்க சஞ்சய் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் ஆனால் இதற்கு தளபதி விஜய் இதுவரை க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.