நடிக்க தயாராகும் மகன் சஞ்சய் ; ‘பிரேமம்’ பட இயக்குனருடன் விரைவில் கூட்டணியா? - வைரலாகும் நடிகர் விஜய்யின் பேட்டி
நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
‘பீஸ்ட்’ படத்திற்கான டிக்கெட்டிகள் விற்று தீர்ந்து விட்டது. டிக்கெட்டுகளை எடுத்து வைத்த விஜய் ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். படத்தின் இயக்குனர் நெல்சன் இதனை தொகுத்து வழங்கினார்.
அப்போது, உங்க பையன் சஞ்சய்-ஐ எப்போது நடிப்பில் பார்க்கிறது? எனற கேள்விக்கு நடிகர் விஜய்,
“நான் அவனை எதுவும் சொல்லமாட்டேன். அவங்களுக்கு புடிச்சதை பண்ணட்டும். அவன் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணனும். ஒரு தடவை பிரேமம் பட இயக்குனர் வந்தாரு, எனக்கு தான் கதை சொல்ல வராருனு நினைச்சன்.
உங்க பையன் கிட்ட கதை சொல்லனும் சொன்னாரு, கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது. சஞ்சய் ஒத்துக்கனும் அத பண்ணனும்னு நினைச்சேன். ஆனா அவன் டைம் கேட்டான். அவன் எது பண்ணாலும் எனக்கு சந்தோஷம்.” என தெரிவித்தார்.