கல்வித்துறையில் ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது - முதல்வர் விஜய்

Tamil nadu TVK C Joseph Vijay
By Vinoja Nov 26, 2026 10:28 AM GMT
Report

கல்வித்துறையில் ஊழல் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு எவ்வாறு அமைதியாக இருக்க முடியும் எனத் தமிழக முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் சமூகத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்பதற்காக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்வித்துறையில் ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது - முதல்வர் விஜய் | Vijay Slams Corruption In The Education Sector

முறைகேடுகளுக்கு எதிராகக் குரல்

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், கல்வித்துறை சமூகத்தின் அடித்தளமாக இருப்பதால், அங்கு நடைபெறும் முறைகேடுகளைச் சாதாரணமாகக் கருத முடியாது எனக் குறிப்பிட்டார். கும்பகோணம் பள்ளி விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கி வரும் நிலையில், அதனைப் பயன்படுத்தியும் முறைகேடுகள் இடம்பெறுவது அதிர்ச்சியளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.கல்வியையும் அறிவையும் வளர்க்க வேண்டிய இடங்கள் ஊழலின் மையங்களாக மாறிவிடக்கூடாது என்றும், இத்தகைய முறைகேடுகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.