அடுத்தடுத்து தவெகவுக்கு தாவும் அதிமுக தலைவர்கள் - செங்கோட்டையன் தகவல்!
2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு
மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை செங்கோட்டையனுக்கு விஜய் வழங்கி இருக்கிறார்.

சென்னையில் இருந்து செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் புறப்பட்டார். அப்போது அவரது காரில் தவெகவின் கொடி கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஈரோடு சுற்றுப்பயணம் தொடர்பாக விரைவில் விஜய்யுடன் கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படும். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செங்கோட்டையன் தகவல்
மக்களால் நேசிக்கப்படுகிற எல்லோரும் வர வேண்டும் என்று தான் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதன் மூலமாக 2026ல் மக்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்.

அதிமுகவில் இருந்து இன்னும் சிலர் வருவார்களா என்ற கேள்விக்கு பதில் கூறினால் பிரச்சனைகள் வரும்.. ஈரோடு மாவட்டத்தில் சில சொந்த பணிகள் இருக்கிறது. மீண்டும் சென்னை வந்த பின் விஜய்யிடம் ஒப்புதல் பெற்று சுற்றுப்பயணம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழ்நாடு முன்னேற அயராது உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.