ரஜினிக்காக விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் ரஜினியின் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில் படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக பாடல் ஒன்றை எழுதும் நிலையில், ரஜினி படத்திலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் கேமியோ ரோலில் சிவா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதைவிட பெரிய ஆச்சரியமாக ரஜினிக்காக ஒரு பாடலை நடிகர் விஜய் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நெல்சன் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இவையெல்லாம் நடந்தால் நிச்சயம் ரஜினி 169 படம் மாஸ் ஹிட் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.