முதலமைச்சராக ஜோசப் விஜய்யின் முதல் கையெழுத்து

Vijay TVK
By Fathima May 10, 2026 05:25 AM GMT
Report

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்ற பின்னர் முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் இன்று ஆட்சியமைத்தது தமிழக வெற்றி கழகம்.

முதலமைச்சர் விஜய்யுடன், 9 அமைச்சர்களும் ்இன்று பதவியேற்றுக்கொண்டனர், விழா தொடங்கிய போது வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்துக்கும் முதல் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததுடன் போதை பொருட்களை ஒழிக்க மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைப்பு திட்டத்தில் கையெழுத்திட்டார்.