கோபமான லோகேஷ் - திடீரென லியோ படப்பிடிப்பு நிறுத்தம்!
விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறுத்தம்
லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் ந்டிப்பில் வெளிவரவுள்ள ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் உள்ளனர். அங்கு தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.
அதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தான் படப்பிடிப்பு நடக்கிறது. ஏற்கனவே, அதனால் படக்குழுவினர்கள் மற்றும் இயக்குனர் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் லோகேஷ் படப்பிடிபை 60 நாட்களுக்குள் முடிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு விஜய் நடித்த காட்சி ஒன்று இனையத்தில் கசிந்து பரவியது.
துக்க சம்பவம்
அதனை பார்த்து கோபமடைந்த லோகேஷ் இனி படப்பிடிப்பு அரங்குக்கு யாரும் செல்போன் கொண்டு வர கூடாது என்று தடை விதித்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் உள்ளவர்களை பாதுகாவலர்கள் நிறுத்தி தக்க சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படக்குழுவை சேர்ந்தவரின் வீட்டில் நடந்த துக்க சம்பவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.