வெப் சீரிஸில் நடிக்க இத்தனை கோடியா?- விஜய் சேதுபதியின் கோரிக்கையை கேட்டு அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்

vijay sethupathy new webseries salary demand
By Swetha Subash Dec 30, 2021 02:09 PM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

பாலிவுட்டிலும் தற்போது களமிறங்கி ஹிந்தியிலும் நடித்து வருகிறார்.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசன் உடன் விக்ரம் மற்றும் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரினா கைப் உடன் புதிய வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழில் ஓர் வெப் சீரிஸ் தயாரிக்கத் திட்டமிட்ட பிரபல ஓடிடி தளம் ஒன்று விஜய் சேதுபதியை அணுகியதாகவும்

கதை மற்றும் இயக்குநர் ஆகியவற்றை அடுத்து சம்பளம் பற்றிய பேச்சு எழுந்த போது விஜய் சேதுபதி தரப்பில் 30 கோடி சம்பளம் வேண்டும் எனக் கேட்டத்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் அரண்டுபோன ஓடிடி தளம் அந்த சீரிஸ் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், 2 அல்லது 2.30 மணி நேரம் வரை படத்திற்கே 10 கோடி வரை சம்பளம் பெறும் அவர் நீண்ட நேரம் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸில் நடிக்க அவர் கேட்ட சம்பளம் ஏற்றுக்கொள்ளத் தக்கது தான் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.