விஜய்சேதுபதியை இறுக்கி அணைத்த வி.ஜே.பார்வதி - வைரலாகும் புகைப்படம் - வெச்சு விளாசும் ரசிகர்கள்

Vijay Sethupathi
By Nandhini Apr 25, 2022 07:17 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தொகுப்பாளியாக அறிமுகமானவர்தான் வி.ஜே. பார்வதி. தற்போது இவர் சினிமா நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவர் யூ டியூப் வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார்.

இதன் பிறகு, விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மூலம் பங்குபெற்று மிகவும் பிரபலமானவர். இதனையடுத்து, பிரபல ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவரில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், வி.ஜே.பார்வதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்பட பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், நீங்கள் சில ஹைப்பர் ஸ்கில்டு கிரியேட்டர்களை சுற்றி இருக்கும்போது என்னுடைய ஹைப்பர் ஆக்டிவ் இயல்பைக் கட்டுப்படுத்த முடியாது. விஜய்சேதுபதி... சினிமா மீது முழு ஈடுபாடு கொண்ட தங்க இதயம். விக்னேஷ் சிவன்... குளிர்ந்த இயற்கையுடன் அற்புதமான மனம். அனைத்து வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா... இப்படி விஜய்சேதுபதியை இறுக்கி பிடிச்சுட்டு இருக்கே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.