'இந்தி' மொழி குறித்த கேள்வி - கடுப்பாகி விஜய் சேதுபதி சொன்ன பதில்!

Vijay Sethupathi Tamil Cinema Katrina Kaif Tamil Actors Tamil Actress
By Jiyath Jan 08, 2024 08:48 AM GMT
Report

மெர்ரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஹந்தி நடிகை கத்ரினா கைப் ஆகியோர் இனைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது, இந்தி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விஜய் சேதுபதி

அதற்கு கடுப்பான விஜய் சேதுபதி "இந்த கேள்வியை இதற்கு முன்பு அமீர்கான் வரும்போது கேட்டீர்கள். எதுக்கு இப்போது இந்த கேள்வி கேட்கிறீர்கள்.

இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொன்னோம். இன்றும் இந்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கேள்வியை தவறாக கேட்கிறீர்கள். இந்த கேள்வி இங்கு தேவையில்லாதது" என்று கூறினார்.