சூரிக்கு அப்பாவாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

tamil master movie
By Jon Feb 09, 2021 10:23 AM GMT
Report

வெற்றிமாறன் இயக்கம் புதிய படத்தில் சூரிக்கு அப்பாவாக நடிக்கவுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில், வில்லனாக நடித்தார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் ஒரு படத்தில், ‘அப்பா’ வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் டைரக்டு செய்கிறார். சூரிக்கு ‘அப்பா’வாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் டைரக்டர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அதில் கலந்து கொள்ள பாரதிராஜாவும் ஊட்டிக்கு சென்றார்.

அங்கு குளிர் கடுமையாக இருந்தது. பாரதிராஜாவினால் அந்த குளிரை தாங்க முடியவில்லை. ‘‘என்னால் இந்த குளிரை தாங்கிக்கொண்டு நடிக்க முடியாது’’ என்று கூறிவிட்டு, அவர் சென்னை திரும்பி விட்டார்.