விஜய் சேதுபதி படத்தை இயக்கிய உதவி இயக்குனர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை

Sucide Vijay Sethupathi Sathyan Assistan Director
By Thahir Oct 29, 2021 01:30 PM GMT
Report

திருவாரூர் அருகே கோயில் தெப்பக்குளத்தில் குதித்து சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் தங்கரத்தினம் (51).

உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் இறந்து விட்டார். இவரது மகன் சத்யன் (31).திருமணமாகாதவர்.

டான்ஸ் மாஸ்டரான இவர், சென்னையில் தங்கியிருந்து திரைப்படஉதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பல குறும்படங்களும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், தங்கரத்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக சத்யன் மன்னார்குடியில் தங்கியிருந்து தாயை கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சத்யன், இரவு 9மணியாகியும் வீடு திரும்பவில்லை.

அவரது தாய், சத்யனின் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுச் ஆப் என வந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், எஸ்எஸ்ஐ வீரையன்.

தனிப்பிரிவு எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், குளத்தில் சடலமாக மிதந்தது தங்கரத்தினத்தின் மகன் சத்யன் என தெரியவந்தது.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், பலதிரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்ற நிறைய வாய்ப்புகள் சத்யனுக்கு வந்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப் பட்ட அவரது தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருந்ததால் சத்யனால் சென்னைக்கு செல்ல முடியவில்லை.

ஒரு பக்கம் பெற்ற தாய்க்கு உடலநலம் சரியில்லை. மற்றொரு பக்கம் தொடர்ந்து வரும் திரைப்படங்கள் வாய்ப்புகளை அவரால் ஏற்க முடியவில்லை.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக சத்யன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இந்த மன அழுத்தத்தினால் தான் அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள 30 அடி ஆழம் உள்ள தெப் பக்குளத்தில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமான என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.