சர்ச்சையான விஜய் சேதுபதி கருத்து: விஜய் தொலைக்காட்சி விளக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய்சேதுபதி தலைமைப்பண்பு குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.
தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ், 10வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த சீசன்களை போன்று இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சனியன்று நடந்த நிகழ்ச்சியில் ஷாதிகா தலைவர் பதவி குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமையின் பொறுப்பை உணராமல், வாக்குறுதிகளை அள்ளிகொடுத்துவிட்டு, பிரச்னைகள் வரும்போது, எதிரணி மீது பழிபோட்டு ஓடுவது, தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை என பேசினார்.
இது வைரலான நிலையில் முதலமைச்சர் விஜய்யின் ரசிகர்கள் கடுமையான விமர்சித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் தொலைக்காட்சி, பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான விதிகள், வடிவம், கருப்பொருள்கள் ஆகியவை விளையாட்டு சூழலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள், போட்டியாளர்களின் பேச்சுகள், கருத்துகள் மற்றும் அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே போட்டியின் ஒரு பகுதி தான்.
இதில் கூறப்படும் கருத்துகள் வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பை குறித்து கூறப்படுவது அல்ல, பொதுபோக்கு நோக்கத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
