பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi Indian actor New Photo
By Thahir Sep 22, 2021 04:30 AM GMT
Report

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங், கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்து வந்தது. அங்கு விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இன்னும் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சியை, ரசிகர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டார்.

பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி | Vijay Sethupathi Indian Actor New Photo

லாங் ஷாட்டில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், விஜய்சேதுபதியின் லுக் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பொங்கலுக்கு, விஜய் சேதுபதியின் லுக்கை வெளியே விட முடிவு செய்திருந்தனர். அதற்குள் அந்த லுக் வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் லுக் என்று விஜய் சேதுபதி, பெரிய மீசை மற்றும் நீண்ட தலைமுடியுடன் இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வந்தது.

அது மாஸ்டர் படத்தின் ஸ்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அது,‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் புகைப்படம்.

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் இந்தப் படத்துக்காக, எந்தெந்த கெட்டப் வைத்தால் நன்றாக இருக்கும் என்று சில ஹேர்ஸ்டைலில் விஜய் சேதுபதியை, படக்குழு புகைப்படம் எடுத்துள்ளது. அந்த ஸ்டில்களில் ஒன்று அது என தெரியவந்துள்ளது.